கன்னடம், இந்தி என்று நடித்து வந்த லட்சுமிராய், தற்போது மீண்டும் கோடம்பாக்கத்துக்கு: லட்சுமிராயின் குத்தாட்ட வாய்ப்பை தட்டிப்பறித்த அக்ஷரா கெளடா!!!
20th of May 2014சென்னை::ஒன்பதுல குரு' படத்திற்கு பிறகு படமே இல்லாமல் கன்னடம், இந்தி என்று நடித்து வந்த லட்சுமிராய், தற்போது மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார். அதர்வா நடிக்கும் இரும்புக்குதிரை படத்தில் முக்கிய வில்லியாக நடித்து வருகிறார். இதே படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியாஆனந்த் நடித்தபோதும், லட்சுமிராய்க்கே கதையில் முக்கியத்துவம் உள்ளதாம்.
அதோடு, இந்த படத்தில் அவரை கமிட்
பண்ணியபோது ஒரு அதிரடியாக குத்தாட்டப்பாடலும் இருப்பதாகத்தான்
சொன்னார்களாம். அதனால், ஏற்கனவே அரண்மனையில் சந்தானத்தடன் ஒரு பாட்டுக்கு
அதிரடியாட்டம் போட்டுள்ள லட்சுமிராய், இந்த பாடலிலும் சூப்பர் ஆட்டம்
போட்டு இளவட்ட ரசிகர்களை அசத்தி விட வேண்டும் என்று திட்டம்
போட்டிருந்தார்.
ஆனால், இயக்குனருக்கு
திடீரென்று ஏற்பட்ட யோசனையின் காரணமாக, ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ்
தமிழச்சி பாடலுக்கு நடனமாடிய அக்ஷரா கெளடாவை அந்த குத்துப்பாட்டுக்கு ஆட
வைக்க முடிவெடுத்திருக்கிறார்களாம். இதனால் தனக்காக இருந்த பாடலை
எங்கிருந்தோ வந்த அக்ஷரா தட்டிச்சென்றுவிட்டாரே என்று பீல்
பண்ணிக்கொண்டிருக்கிறார் லட்சுமிராய்....


Comments
Post a Comment