கே.ஆர நிர்வாகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது - ஞானவேல் ராஜா அறிக்கை!!!

13th of May 2014
சென்னை::தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், தற்போது உள்ள கே.ஆர் தலைமையிலான நிர்வாகத்தின் மீது, நேற்று நம்பிக்கையிலா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கான நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கே.ஆர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியும் அடைந்தது.

ஆனால், இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று, இது குறித்து ஞானவேல் ராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

11.5.2014 அன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க சிறப்புப் பொதுக்குழுவில் கே.ஆர். நிர்வாகத்தின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டப்படி செல்லாது.
ஏன் என்றால்.....?

1. எந்த காரணத்திற்காக கே.ஆர். நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

2. நிகழ்ச்சி நிரல்படி முறையாக தீர்மானங்கள் பற்றி பேச அனுமதிக்கப்படவில்ல.

3. முக்கியமான தீர்மானங்கள் பற்றி விளக்கமாக பேச அனுமதிக்கப்படவில்லை.

4. ஓட்டுரிமையுள்ள 92 பேருக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

5. ஓட்டுரிமை மறுக்கப்பட்ட ஒரு உறுப்பினரான திரு. சுரேஷ் காமாட்சி அவர்கள் நீதிமன்றம் சென்று ஓட்டுரிமை பெற்று வாக்களித்துள்ளார்.

6. பொதுக்குழுவில் சிலர் அராஜகமாக நடந்து கொண்டதால், சிலர் தங்கள் விளக்கத்தை உறுப்பினர்களுக்கு சொல்ல முடியவில்லை. மூத்த தயாரிப்பாளர்கள் பலர் வாக்களிக்காமல் சென்றுவிட்டார்கள்.

பொதுக்குழுவில் ஓட்டளிக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு மடங்கு பலத்தைப் பெற்றால் மட்டுமே தீர்மானம் வெற்றி பெற்றதாகும்’’ என்பதை தேர்தல் பொறுப்பு ஓய்வுபெற்ற நீதிபதி பி.சண்முகம் 1.5.2014 அன்று அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி பார்த்தால் பதிவான 449 ஓட்டுக்களில் வெற்றிபெற வேண்டுமானால் ஏறத்தாழ 300 ஓட்டுக்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் பெற்றது 261 ஓட்டுக்கள் மட்டுமே. ஆகையால் இத்தீர்மானம் சட்டப்படி செல்லாது.

இத்தகைய முறைகேடுகள் பற்றிய தகவல்களை புகாராகவே ஓய்வுபெற்ற நீதிபதி பி.சண்முகம் அவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தற்போதுள்ள நிர்வாகத்தில் பதவியில் உள்ள துணைத்தலைவர்  திரு. டி.ஜி.தியாகராஜன், செயலாளர் திரு. டி.சிவா, பொருளாளர் திரு. ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய இவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமலேயே அவர்கள் அங்கம் வகிக்கும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த திரு. தாணுவுடன் சேர்ந்து கொண்டார்கள்.

ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு, அதை நீதிபதி இன்னும் பத்து தினங்களில் நீதிமன்றத்தில் ஒப்படைப்படைதாகவும், முடிவை நீதிமன்றம்தான் அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, நம்பிக்கையில்லா தீர்மானம் முடிவை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அறிக்கையில் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

Comments