விமர்சனம் » வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!!!

12th of May 2014
சென்னை::அறை எண் 305-ல் கடவுள்", "கண்ணா லட்டு திண்ண ஆசையா இரண்டு படங்களிலும் இரண்டு மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்த காமெடி நடிகர் சந்தானம், ஸோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். "நான் ஈ ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கில் சூப்பர்-டூப்பர் ஹிட்டான "மரியாதை ராமண்ணாவின் தமிழ் ரீ-மேக்!

சந்தானத்தின் நெருங்கிய நண்பரும், காமெடி நடிகருமான ஸ்ரீநாத்தின் இயக்கத்தில், தமிழில் வெளிவந்திருக்கும் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எப்படி? இனி பார்ப்போம்...

கதைப்படி ஹீரோ சந்தானம், பழைய சைக்கிள் ஒன்றில் கடை கடையாக வாட்டர்கேன் போடும் வாட்டர் சப்ளையர் வேலை பார்க்கிறார். சந்தானத்தின் "கறார் முதலாளி ஒருநாள், லோன் போட்டாவது நீ "சின்ன யானை லோடு ஆட்டோ வாங்கி வந்தால் தான் உனக்கு வேலை, அதுவரை நம் பிஸினஸூக்கு இந்த ஓட்(டை)ட சைக்கிள் ஒத்து வராது, நீயும் ஒத்து வரமாட்டாய்... என உதறிவிட, கதறி துடிக்கும் சந்தானம் காசுக்காக நாயாய், பேயாய் அலைகிறார்.

காலணா காசு கிடைத்தபாடில்லை... கடுப்பாகும் சந்தானம், அப்பா, அம்மாவை இழந்த அநாதையான தனக்கு, அடைக்கலம் கொடுத்திருக்கும் தூரத்து உறவிடம் பொழப்புக்கு என்ன செய்வேன்? என புலம்புகிறார். அந்த உறவோ, ஏன்? உனக்கென்ன குறை...? உனக்கு ஊரில் உங்க அப்பா சொத்து கொஞ்சம் இருக்கிறது என உயிலை எடுத்து காண்பிக்கிறார். அது கண்டு முகம் மலரும் சந்தானம் அதை கொடுங்கள், அந்த சொத்தை வித்து நான் பிழைத்து கொள்கிறேன் என்கிறார். ஆனால் அந்த உறவோ, அந்த ஊரில் பெரும் பகையும் உன் குடும்பத்திற்க இருக்கு என்பதால் தான் கடைசி வரை இந்த சொத்து விபரத்தை உன்னிடம் கூறாமல், வீட்டு வேலை செய்து உன்னை வளர்த்தார் உன் தாய்... அதனால் இந்த உயிலை இப்போதைக்கு உன்னிடம் தர முடியாது, நீ வெறுத்து போய் பேசியதால் உனக்கு ஆறுதல் அளிக்கும்படியாக இந்த உயிலை காண்பித்தேன், என்று கூற, பிடிவாதமாக அவரிடம் உயிலை பிடுங்கி கொண்டு அரவங்காடு எனும் அழகிய ஊரில் இருக்கும் தன் பூர்வீக சொத்தை விற்க ரயிலேறுகிறார் சந்தானம். தனக்கு ஆபத்பாந்தனமாக அதுநாள் வரை இருந்த சைக்கிளையும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டும் கிளம்பும் சந்தானம், ரயிலில் ஹீரோயினை சந்திக்கிறார்.

தன் பூர்வீக சொத்து விற்பனை சம்பந்தமாக ஊர் பெரிய மனிதரான ராயர் வீட்டுக்குபோகும் சந்தானம், அங்கு அவர்கள் வழக்கப்படி விருந்தாளியாக உபசரிக்கப்படுகிறார். என்ன ஆச்சர்யம்.?! ராயரின் மகள்தான் சந்தானம் ரயிலில் சந்தித்த நாயகி ஆஷ்னா சவேரி என்பதும், அதைவிட ஆச்சர்யம், ப்ளஸ் அதிர்ச்சி, ஆஷ்னா சவேரி சந்தானத்தின் முறைப்பெண் என்பதும், ஆஷ்னாவின் அப்பா ராயரும், சகோதரர்களும் தான் 27 வருட பகையுடன் சந்தானத்தை போட்டுத்தள்ள காத்திருக்கும் பகையாளிகள் என்பதும் தான் டுவிஸ்ட். டுவிஸட்டுக்கே டுவிஸ்ட்!

தங்கள் வீட்டிற்குள் கொலை செய்வதில்லை... எனும் கொள்கையுடைய ராயரும், அவரது மகன்களும் விருந்

தாளியான சந்தானத்தை வெளியில் வரவைத்து கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். அதை தெரிந்து கொள்ளும் சந்தானம், அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் ஜமாய்ப்பது தான் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் காமெடி கதைக்களம்! இதில் அதகளம் செய்திருக்கும் சந்தானம், வீட்டை விட்டு வெளியில் வந்தாரா? பகையாளிகளை வென்றாரா? பகையை கொன்றாரா? நாயகியின் காதலை உணர்ந்தாரா.? அவரை மணந்தாரா? என்பது தான் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ்!

சந்தானம் வழக்கம் போலவே வரும் சீன்களில் எல்லாம் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார். அதிலும் ராஜகுமாரன் கோஷ்டியுடன் அவர் செய்யும் அலும்பு செம காமெடி! ஹீரோவாக நடித்திருப்பதால் உஷாராக வழக்கமான தனது இரட்டை அர்த்த வசனங்களை எல்லாம் தவிர்த்து "பன்ச் டயலாக்கு பேசி பட்டையை கிளப்பி இருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல! அதிலும், "டைமிங்காக, ""மதுரை பெருமை பேச சசிக்குமார், விஷால் எல்லாம் இருக்காங்க, சென்னையை பற்றி பேச என்னை விட்டா யார் இருக்கா.? எனக்கேட்டும் இடத்திலாகட்டும், ""பொண்ணுங்களோட "ஆக்சலேஷன் மயிண்டு தான் பல காதல் பிரிவுக்கு காரணம் என்றும், அதையும் மீறி அப்பா அம்மா, எப்படியும் பிரிச்சுடுவாங்கக்கிற தைரியத்தல தான் பொண்ணுங் காதலிக்கவே செய்றாங்க என்றும்..., அவர் அடிக்கும் பன்ச்கள் ஆகட்டும், அதற்கு உதாரணமாக அதே ரயிலில் பிரயாணிக்கும் ஒரு ஆணையும், பெண்ணையும் வைத்து சொல்லும் ரஜினி, கமல், மாதவன், சிம்பு, டயலாக்குகள் ஆகட்டும்... இன்னும் இஷ்டத்திற்கு கொளுத்தி போடும் சிரிப்பு வெடிகளில் ஆகட்டும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. கீப் இட் ஞூப் சந்தானம்!

ஆஷ்னா சவேரி, அசப்பில் சற்றே சதை போட்ட ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கிறார். நடிப்பிலும், இளமை துடிப்பிலும் கூட அப்படியே. "மிர்ச்சி செந்தில், விடிவி கணேஷ், ராஜகுமாரன் உள்ளிட்டவர்களும் ஓ.கே.!

சித்தார்த் விபினின் பின்னணி இசை பலம். பாடல்களும், அதன் இசையும் பலவீனம். (ரீ-மேக் படத்திற்கு கூட டப்பிங் படங்கள் மாதிரியே தான் பாடல்கள் இருக்க வேண்டுமா? என்ன.?!) சக்தி, ரிச்சர்ட் என்.நாதன் இருவரின் ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. ரஜினியின் அண்ணாமலை படத்திற்குப்பின் "மதிவண்டியையும் ஒருபாத்திரமாக்கி, அதற்கு டி.ஆர். டைப்பில் ஒரு குரலையும் கொடுத்திருப்பதற்காக இயக்குநர் ஸ்ரீநாத்தை பாராட்டலாம்!

ஆகமொத்தத்தில், ""வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - ரசிகர்கள் ""சந்தானத்தை ஹீரோவக்கியுள்ள ஆயுதம்!

Comments