ரஜினியின் லிங்கா படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு!!!

6th of May 2014
சென்னை::காவிரி விஷயத்தில் ரஜினியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னடர்கள் சிலர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும் கர்நாடகத்தில் லிங்கா படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும், படப்பிடிப்பு நடக்கும் இடத்தை முற்றுகையிடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
மேல்கோட்டையில் பிரசித்தி பெற்ற யோக நரசிம்மசாமி கோவிலின் பின்புறம் உள்ள மலைப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சோனாக்ஷி சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு தளத்துக்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. இதனால் அவர் ஓரிடத்தில் அமர்ந்து படப்பிடிப்பை பார்த்தார். படப்பிடிப்பை காணவும், ரஜினிகாந்தை பார்க்கவும் உள்ளூரில் இருந்தும், பெங்களூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் மேல்கோட்டையில் குவிந்திருந்தனர். கர்நாடக மாநிலம் ராமநகரில் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த் கன்னடர்களுக்கு எதிராக பேசியதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் மேல்கோட்டையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறினார்கள். இதன் எதிரொலியாக லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ...

Comments