50 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரனுக்கு கை கொடுக்குமா என்றுமே ஆனந்தம்!!!

25th of May 2014
சென்னை::50 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். கும்பகோணம் கோபாலு, தாய்குலமே தாய்குலமே படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சதிரம் என்ற மாநில அரசின் விருதை பெற்றார். இளைஞன் ஆனதும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் நடித்த படம் எதுவுமே சரியாக போகவில்லை.

கடைசியாக விழா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தார். காரணம் அந்த அளவிற்கு மீடியாக்களால் பாராட்டப்பட்ட படம். ஆனால் ஓடவில்லை. தற்போது அக்கி, போரிட பழகு படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்த வசந்தம் வந்தாச்சு என்ற படத்தை இயக்கிய விவேகபாரதி இயக்கும் என்றுமே ஆனந்தம் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சுவேதா ஹீரோயினாக நடிக்கிறார். இவர் மீராவுடன் கிருஷ்ணா, இதயம் திரையரங்கம் படங்களில் நடித்தவர்.

"தாயின் அன்பு, தந்தையின் அரவணைப்பு, நட்பின் பிடிப்பு. காதலின் இறுக்கம் இவற்றை சரியாக கையாண்டால் வாழ்க்கையில் என்றுமே ஆனந்தம் என்று மெசேஜ் சொல்லுகிற படம். தற்கொலை என்பது ஒருவர் மட்டும் சாகிற விஷயம் அல்ல பலரை கொல்கிற விஷயம், இது கொலையை விட கொடுமையானது என்பதையும் காட்டும் படம். இந்தப் படம் மகேந்திரனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்" என்கிறார் இயக்குனர் விவேகபாரதி...

Comments