நண்பர்களுக்காக தான் படம் எடுக்கிறேன் - சந்தானம்!!! Vallavanukku Pullum Aayudham Audio Launch Photos!!!

16th of April 2014
சென்னை::கோடிகளை சம்பாதிக்கும் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், இனி கோடிகளை சம்பாதிக்கும் ஹீரோவாக வலம் வரப்போகிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த சந்தானம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்...

















Tags: Vallavanukku Pullum Aayudham Audio Release Gallery, Vallavanukku Pullum Aayudham Songs Vallavanukku Pullum Aayudham Launch Event Stills, Vallavanukku Pullum Aayudham Movie Audio Release Photos, Vallavanukku Pullum Aayudham Audio CD Launch Pictures, Vallavanukku Pullum Aayudham Audio Release Function images

தெலுங்கில் மாபெரும் வெற்றிப் பெற்ற 'மரியாதை ராமணா' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' தெலுங்கு திரையுலக முன்னணி இயக்குநர் ராஜமெளலி இயக்கிய இப்படத்தில், தெலுங்கு சினிமா காமெடி நடிகர் சுனில் நாயகனாக நடித்தார். இப்படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்று தற்போது சுனில் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.

இதற்கிடையில், இப்படத்தை தமிழில் சந்தானம் தனது ஹண்ட்மேட் பிக்சர்ஸ் மூலம், பிவிஆர் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, ஹீரோவாகவும் நடிக்கிறார். மறைந்த இயக்குநர் ஜீவாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பிறகு நடிகராக இருந்த ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்குகிறார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். நா.முத்துகுமார், மதன் கார்கி, லலிதாமணி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஏப்.14) சென்னை, தேவி திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜமெளலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், "நடிகராக இருந்துவிட்டு படம் எடுத்தற்கு காரணம் எனது நண்பர்கள் தான். அவர்களுக்காக தான் நான் படம் எடுக்கிறேன். இவன் வெற்றி பெற்றால், நமக்கு ஏதாவது செய்வான் என்று எதிர்ப்பார்த்திருந்த, நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே நான் படங்களை தயாரிக்கிறேன். இந்த படத்தை நான் ஆரம்பிக்கும்போது, இதில் உள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களை கேட்டு, "என்ன அனைவரும் புதிதாக இருக்கிறார்களே" என்று கூறினார்கள், பெரிய ஆட்களை வைத்துக்கொண்டு வெற்றி பெறுவது வெற்றி அல்ல, இதுபோன்ற புதுமுகங்களை வைத்துக்கொண்டு வெற்றி பெற்றால் தான் வெற்றி.

இந்த படத்தில் நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக உழைத்திருக்கிறோம். அதிக பொருட்ச்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்தும், நானும் ஒன்றாக நிறையப் படங்களில் நடித்திருக்கிறோம், அப்போது ஏற்பட்ட நட்பின் மூலம் தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தேன். படத்தை ரொம்ப நன்றாக இயக்கியிருக்கிறார். கண்டிப்பாக 'வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்' படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்." என்றார்...

பெரிய நடிகர்கள், பெரிய டெக்னீஷியன்கள் தேவையில்லை - சந்தானம் அதிரடி!!!

 
பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் யாரும் எனக்கு தேவையில்லை, நான் என்னை மட்டுமே நம்பி இருக்கிறேன் என்று நடிகர் சந்தானம் அதிரடியாக பேசினார். தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் முதன்முறையாக தனி ஹீரோவாக களம் இறங்கியுள்ள படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சந்தானம் பேசிய பேச்சு அதிரடியாக இருந்தது.

விழாவில் அவர் பேசியதாவது, எவ்வளவு நாளைக்குத்தான் நானும் காமெடியனாகவே நடிக்கிறது, அதான் ஹீரோவாக களம் இறங்கிவிட்டேன். எனக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ வேண்டும் என்று இத்தனை நாள் காத்திருந்தேன். அது இப்போது கிடைத்துவிட்டது. என் நண்பர்கள், ரசிகர்கள் எல்லோரும் என்னை ஹீரோவாக நடியுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அதன்படி இந்தப்படத்தின் கதை பிடித்து போக, இதுதான் சமயம் என்று ஹீரோவாக களம் இறங்கிவிட்டேன்.
 
இந்தப்படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத் என் நண்பர் தான். அவர் எனக்கான ஹீரோயின் எப்படி வேண்டும் என கேட்டபோது எனக்கு அனுஷ்கா மாதிரி வேணும், ஐஸ்வர்யா ராய் மாதிரி வேணும் என்றெல்லாம் கேட்கவில்லை, எனக்கு ஏற்றபடி ஒரு ஹீரோயின் பார் என்று தான் சொன்னேன் என்றார். மேலும் இந்தப்படத்துக்காக 3 மாதம் டான்ஸ் பயிற்சி எல்லாம் எடுத்து நடித்தேன்.
 
இந்தப்படத்தை நான் யாரையும் நம்பி எடுக்கவில்லை. முழுக்க முழுக்க என்னை மட்டுமே நம்பி இறங்கியிருக்கிறேன். எனக்கு பெரிய பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்கள், டெக்னீஷியன்கள் எல்லாம் தேவையில்லை, இந்த விழாவுக்கு கூட முன்னணியில் இருக்கும் ஹீரோ, இயக்குநர்களை நான் கூப்பிடவில்லை, எனக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிற நல்ல இதயங்கள் படைத்தவர்கள் மட்டும் என்னுடன் இருந்தால் போதும் என்றார்.
 
விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் ராஜமெளலி, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் சந்தானத்தையும், அவரது படத்தையும் வெற்றி பெற வேண்டி வாழ்த்தினர்.....

Comments