Om Shanti Om Tamil Movie Latest Stills!!! ஓம் சாந்தி ஓம், எப்போதும் வென்றான் படங்களை வெளியிட கோர்ட் தடை!!!
இணை தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மீது தொடுத்த பண விவகார வழக்கின் காரணமாக ஓம் சாந்தி ஓம், எப்போதும் வென்றான் படங்களுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஓம் சாந்தி ஓம்
ஸ்ரீகாந்த்,
புதுமுகம் நீலம் உபாத்யாயா நடித்துள்ள படம் ஓம் சாந்தி ஓம். சூரிய
பிரபாகர் இயக்கி உள்ளார். 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின்
சார்பில் பி.அருள் சந்திரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இணை
தயாரிப்பாளராக இருந்தவர் சாலிகிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர். இவர் சென்னை
3வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
"அருமை
சந்திரனுடன் இணைந்து ஓம் சாந்தி ஓம் என்ற படத்தை தயாரித்தேன். எனக்கு
செங்கற்பட்டு ஏரியா விநியோக உரிமையும், தொலைக்காட்சி உரிமையும் தரப்பட
வேண்டும் என்பது எங்களுக்குள் உள்ள ஒப்பந்தம். தற்போது படம் வெளிவர
தயாராகிவிட்டது. இந்த நிலையில் எனக்கு தர வேண்டிய உரிமங்களை இன்னொருவருக்கு
விற்க முயற்சித்து வருகிறார். எனவே எனக்குரிய உரிமங்களை தந்த பிறகே படத்தை
வெளியிட வேண்டும். அதுவரை படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்" என்று அவர்
தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வருகிற
8ந் தேதி வரை படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்தது.
எப்போதும் வென்றான்
முன்தினம்
பார்த்தேனே, டூ படங்களில் நடித்த சஞ்சய், சுனு லட்சுமி நடித்துள்ள படம்
எப்போதும் வென்றான். சிவசண்முகன் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ஆர்.கிரியேஷன்
சார்பில் டி.ஜி.எஸ் ராஜாராம் தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்று 4ந் தேதி
வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த
நிலையில் இந்தப் படத்துக்கு தடைகேட்டு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன்
என்பவர் சென்னை 18வது சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
"எப்போதும் வென்றான் படம் தயாரிக்க தயாரிப்பாளர் ராஜாராமுக்கு எனது தந்தை
ரகுநந்தன் குப்தா 95 லட்சம் கொடுத்துள்ளார். என் தந்தை இறந்துவிட்ட
நிலையில் அவர் கொடுத்த பணத்தை ராஜாராம் திருப்பித் தர மறுத்து வருகிறார்.
எனவே எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்த பிறகே படத்தை வெளியிட
வேண்டும்" என்று தனது மனுவில் ரங்கராஜன் கூறியுள்ளார். மனுவை விசாரணைக்கு
ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தோடு
தயாரிப்பாளர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது..


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Comments
Post a Comment