அஜித்துடன் இணைந்து விவேக் நடிக்க இருக்கிறார்!!!!

21st of April 2014
சென்னை::வீரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜீத், அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பு கிரீடம் படத்தில் அஜித்-விவேக் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கிட்டதட்ட 13 வருடங்களுக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் விவேக் நடிக்கிறார். 2001-ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘மின்னலே’ படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து கௌதம் மேனன் நிறைய படங்களை இயக்கினாலும் அந்தப் படங்களில் விவேக் நடிக்கவில்லை.

இந்நிலையில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு கௌதம் மேனன், விவேக்குடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார். அதேசமயம், கௌதம் மேனன் இயக்கத்தில் விவேக் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்...
’’

Comments