குடி, கூத்து, கும்மாளம்… : துபாயின் இன்னொரு முகத்தைக் காட்ட வரும் ‘திருந்துடா காதல் திருடா’!!!

29th of April 2014
சென்னை::கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து துபாயில் வேலைக்கு சென்ற மூன்று தலைமுறையினரின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்ற வருகிறது ஒரு படம். அதுதான் ‘திருந்துடா காதல் திருடா’.
 
கள்ளத்தோணியில் துபாய்க்குச் சென்று செட்டிலானவர்கள், ஏஜெண்ட்டுகள் மூலம் பணத்தைக் கட்டி துபாய் போனவர்கள், முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து அங்குள்ள ஐ.டி கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் என மூன்று தலைமுறைகளின் துபாய் நாட்டு வாழ்க்கையைத் தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் டைரக்டர் அசோக் ஆர்.நாத்.
 
மலையாளத்தில் ‘ஷபவம்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான தேசியவிருதைப் பெற்ற இவர் தமிழில் டைரக்ட் செய்யும் முதல்படம் இது.
 
திருமணம் ஆன ஐந்தாவது நாளில் துபாய்க்கு வேலைக்குப் போனவர் ஐந்து வருஷங்கள் ஆகியும் கூட மனைவியைப் பார்க்க முடியவில்லை. அப்படிப்பட்டவரின் பாலியல் ஆசைக்கு அவர் செய்யும் திருட்டுத்தனங்கள் என்னென்ன? மாதிரியான ஏடாகூடமான சமாச்சாரங்கள் தான் படத்தில் ஹைலைட்டாம்.
 
ஹீரோவாக ஆதில் இப்ராஹிம் நடிக்க, சுதக்‌ஷனா அறிமுகமாகிறார். இதுபோக படத்தில் 40 புதுமுகங்களும் உண்டாம். 400 பேரை ஆடிஷன் செய்து அதில் 40 பேர்களை செலெக்ட் செய்து இந்த புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
 
கட்டுப்பாடுகள் நிறைந்த அரபுதேசத்தில் எப்படி கிளாமர் சீன்களைப் படமாக்கினீர்கள் என்று கேட்டால், அங்கும் கூட கிளப், பெல்லி டான்ஸ், இரவுக் களியாட்டங்கள் எல்லாம் உண்டு, ஆனால் அது எல்லா இடங்களிலும் இல்லை. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் உண்டு. அப்படிப்பட்ட இடங்களில் லைவ்வாக படமாக்கியிருக்கிறோம் என்றார் ஒளிப்பதிவாளர் சணல் தோட்டம்.
 
படத்தை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப் போகிறார்கள்..
 

Comments