ஆர்யாவின் தம்பி கொடுத்த விருந்து!!!


26th of April 2014
சென்னை::விஜய் ஆதிராஜ் இயக்கிய ‘புத்தகம்’ படத்தின் மூலம் கதாநாயகனான ஆர்யாவின் தம்பி சத்யா, இப்போது ‘அமர காவியம்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மலையாள இளம் முன்னணி நடிகை மியா ஜார்ஜ் இந்தபடத்தில் நடிப்பதன் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவாசங்கர்தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
 
கடந்த 22ஆம் தேதியுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டமிட்டபடி மிகச்சரியாக படப்படிப்பை நடத்தி முடித்துவிட்டார்கள். படம் நன்றாக வந்திருக்கும் சந்தோஷத்தில் கதாநாயகன் சத்யா, படத்தின் இயக்குனர், கதாநாயகி மியா ஜார்ஜ் மற்றும் ஒளிப்பதிவாளர், இயக்குனர் டீம் ஆகியோரை அழைத்து விருந்து கொடுத்து பாராட்டியுள்ளார். சத்யா அளித்த விருந்தால் படக்குழுவினர் நெகிழ்ந்து போயிருக்கின்றனர்..
 

Comments