அஜீத்துக்கு வில்லனா? அருண் விஜய் பதில்!!!

25th of April 2014சென்னை::அஜீத் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் கவுதம் மேனன். இதில் வில்லனாக அருண் விஜய் நடிப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி அருண் விஜய் கூறியதாவது:கவுதம் மேனன் படத்தில் நடிப்பது சந்தோஷம். அஜீத்துக்கு வில்லனாக நடிக்கிறேனா? அல்லது வேறு முக்கிய வேடமா? என்பதை இயக்குனரே விரைவில் சொல்வார்.
 
அஜீத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து இதுவரை நடிக்காவிட்டாலும் எங்கு பார்த்தாலும் அன்பாக நலம் விசாரிப்பார்.இதில் ‘அரவிந்த்சாமி நடிப்பதாக இருந்த வேடத்தை இயக்குனர் எனக்கு தந்தாரா?‘ என்கிறார்கள். அரவிந்த்சாமி நடிக்கிறாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது.
 
ஆனால் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு என்னை நடிக்க வைக்க முடிவு செய்திருந்ததாக இயக்குனர் என்னிடம் தெரிவித்தார். இதன் ஷூட்டிங்கிலும் பங்கேற்று நடித்து வருகிறேன். ‘தடையற தாக்க‘ படத்துக்கு பிறகு  ‘வா டீல்‘ படத்தில் நடித்திருக்கிறேன். எதற்கெடுத்தாலும் டீல் வைத்துக்கொள்ளும் கதாபாத்திரம். ‘கோ‘ கார்த்திகா ஹீரோயின். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இவ்வாறு அருண் விஜய் கூறினார்.
 

Comments