சென்சார் நோட்டீஸுக்கு தப்பிய கோச்சடையான்!!!


3rd of April 2014
சென்னை::ஒரு படத்தை செனசார் அதிகாரிகளுக்கு போட்டுக்காட்டி தணிக்கை சான்றிதழும் வாங்கிவிட்டால் அதன்பிறகு அந்தப்படத்தில் மேற்கொண்டு தொழில்நுட்ப ரீதியாக திருத்தங்கள் ஏதும் செய்யக்கூடாது. இது நடைமுறை விதி. ஆனால் ‘கோச்சடையான்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பும் படம் சம்பந்தப்பட்ட வேலைகள், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தணிக்கை குழுவினருக்கு தகவல் வந்தது..
 
ஆனால் அவர்கள் விசாரித்தபோது தொழில்நுட்ப ரீதியான திருத்தங்கள் நடப்பது தமிழ் ‘கோச்சடையானுக்கு அல்ல.. இந்தியில் ரிலீஸாகும் கோச்சடையானுக்கும் மற்றும் 3டியில் வெளியாகும் பதிப்புக்கும் தான் என தெரியவந்துள்ளது.
 
இதுகுறித்து சென்சார் அதிகாரியான பக்கிரிசாமி சொல்லும்போது, “நாங்கள் சர்டிஃபிகேட் கொடுத்தது ‘கோச்சடையான்’ 2டி பதிப்புக்குத்தான். இது அவர்களது இந்தி மற்றும் 3டி பதிப்பில் திருத்தங்கள செய்வதை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது. அதனால் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பவேண்டிய தேவை எதுவும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்....

Comments