கடவுள் பாதி மிருகம் பாதி’யில் என்ன ஸ்பெஷல்..?!!!

20th of March 2014
சென்னை::கடவுள் பாதி மிருகம் பாதி’. உலகநாயகனால் பேசப்பட்ட, பாடப்பட்ட இந்த வசனம் மிகப் பிரபலமானது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நல்லவன் கெட்டவனில் எவன் எப்போது வருவான் என்று யாருக்கும் தெரியாது. இந்த கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது இந்தப்படம்.
ஒரே நாளில் நடக்கும் பரபர சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராக இந்தப்பட்த்தை இயக்குகிறார்

ராஜ். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் பிருத்விராஜ், மம்தாவை வைத்து ‘அன்வர்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்தவர் தான்.
ராம் கோபால் வர்மாவின் ‘ரோடு’ லிங்குசாமியின் ‘பையா’, வெற்றிமாறனின் ‘உதயம் NH4′ படங்கள் மாதிரி ஆனால் புதிய வடிவத்தில் இதுவும் ரோடு சைடு த்ரில்லர் தான். ஆனால் வேறு வகையான கதை. சென்னை டு ஹைதராபாத் பழைய ஹைவேயில். முதல்நாள் இரவு தொடங்கி மறுநாள் இரவில் முடிகிறது.
ஹைவேயில் பயணம் செய்யும் சில முக்கிய கேரக்டர்கள் அவை சந்திக்கும் சம்பவங்கள்தான் பரபரப்பான சஸ்பென்ஸ். படத்தில் ஒரு முக்கியமான வினோதமான கேரக்டரும் பயணம் செய்கிறது. அவன் நல்லவனா கெட்டவனா.. என்பதுதான் கதை பயணிக்கும் பாதை” என்கிறார் பட்த்தின் இயக்குனர் ராஜ்.
படத்தில் அந்த வினோத பெயரில்லாத பாத்திரத்தை இயக்குநர் ராஜ் ஏற்று நடித்துள்ளார். அபிஷேக், மற்றும் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா ஸ்வேதா விஜய் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ‘மைனா’ இன்ஸ்பெக்டர் சேதுவும் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார்.
இசை ராகுல்ராஜ். இவர் தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் சித்தார்த், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்த ‘ஒ மை ப்ரண்ட்’ மற்றும் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த ‘லண்டன் பிரிட்ஜ்.’ ‘பேச்சுலர் பார்ட்டி’ படங்களுக்கு இசையமைத்தவர். இப்படத்தின் டீஸர் வெளியான சில மணிநேரத்தில் பத்தாயிரம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது இயக்குநரை பரவசப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments