சென்னையை சுற்றியே படமாக்கப்படும் ‘நான் சிகப்பு மனிதன்’!!!

5th of March 2014
சென்னை::பாண்டியநாடு’ தந்த வெற்றியின் உற்சாகத்தோடு பரபரப்பாக ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்துவருகிறார் விஷால். இந்தப் படத்தை திரு இயக்குகிறார்.

படத்தை யு டி.வி. நிறுவனத்துடன் இணைந்து விஷாலின் சொந்த நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது முழு நீள காதல், ஆக்ஷன், திரில்லர் படமாக தயாராகிறது. இந்நிலையில் படத்தின்  90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இன்னும் ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டை காட்சி மட்டும்தான் படத்தில் பாக்கியாம். இந்தப் பாடலில் விஷாலுடன் இணைந்து இனியா ஆட்டம் போட இருக்கிறார். பாடலை சென்னை அருகேயுள்ள மாதவரத்தில் படமாக்க இருக்கிறார்கள்.

முன்னதாக திரு இயக்கத்தில் விஷால் நடித்த, ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’ ஆகிய படங்களின் சில காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கிய இயக்குனர் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் பாடல்களை முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் படமாக்கியுள்ளார்.

இவைதவிர இரண்டு பாடல்களை மட்டும் குலுமணாலி, ராஜஸ்தான் சென்று படப்பிடிப்பை நடத்தியுள்ளார். அதோடு சரி. வேறு எங்கும் போகவில்லை.காரணம், படத்தை விஷாலும் சேர்ந்து தயாரிப்பதால் கூட இருக்கலாம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 13-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது..
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments