கர்நாடகா ஒன்றும் பாகிஸ்தான் அல்ல - த்ரிஷா சாட்சியாக சி.சி.எல்., விஷால் நம்பிக்கை!!!

1st of February 2014
சென்னை::சென்னை ஹயாத் ஹோட்டலில் சி.சி.எல்., (செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்) சார்பில் சென்னை ரைனோஸ் அணியினர், பத்திரிகை மற்றும் மீடியாக்களை சந்தித்தனர். அப்போது பேசிய அணியின் கேப்டன் நடிகர் விஷால், சி,சி.எல்., கிரிக்கெட் சீசன் 4வது முறையாக தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 25ம் தேதி மும்பை அணியினருடன் மோதி நாங்கள் வெற்றி பெற்றோம். அதன் தொடர்ச்சியாக வரும் பிப்ரவரி 2ம் தேதி, சென்னை ரைனோஸ் அணி, கர்நாடக அணியினருடன் விளையாட உள்ளது.
 
முதலில் எங்கள் இரு அணியினரின் மோதல் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கும் ஏதோ விரும்புத்தகாத சூழல் இருப்பதால், இங்கு அந்த மோதல் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக பெங்களூரில் நடைபெற இருக்கிறது என்றார் விஷால். அவருடன் சென்னை சினிமா கிரிக்கெட் அணியின் உரிமையாளர் கங்க பிரசாத், இந்தவருடம் சென்னை ரைனோஸ் அணியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை த்ரிஷா உள்ளிட்ட சென்னை ரைனோஸ் அணியினரும் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கேப்டன் விஷாலும், சென்னை அணியினரும் அளித்த பதில்கள் வருமாறு...

நமது நிருபர் : சென்னை அணியினர் தொடர்ந்து சாம்பியன்ஸ்ஷிப் பெற்று வருகிறது. இதுமாதிரி ஒரு அணி பாப்புலாரிட்டியில் இருந்தது என்றால் அதில் ஊழல்களும்(மேட்ச் பிக்ஸிங்) ஏற்பட வாய்ப்பு இருக்கிறதே...?

விஷால் : எனக்கு வேறு யார் மீதும் சந்தேகம் இல்லை. நடிகர் சிவாவை தான் சந்தேகமாக பார்க்கிறேன் என்று(சிவாவை திரும்பி பார்த்தபடி...) நகைச்சுவையாக கூறினார் விஷால்.

நமது நிருபர் : நமது சென்னை சினிமா கிரிக்கெட் அணியிலிருந்து ஒரு வீரரை இந்திய கிரிக்கெட் அணிக்கு அனுப்பலாம் என்றால் ஒரு கேப்டனாக யாரை தேர்வு செய்வீர்கள்.?

விஷால் : எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள விக்ராந்தும், ஜீவாவும் ஷூட்டிங் இருப்பதால் இன்றைய பிரஸ்மீட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நான் விக்ராந்த்தை தான் இந்திய அணிக்கு அனுப்புவேன். அவர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர். (நடிகர் விஷ்ணுவும் என் சாய்ஸ்)

நமது நிருபர் : இந்திய கிரிக்கெட் அணியில் சப்-ஜூட்டாக (விளையாடாத ஆட்டக்காரர்) யாரை அனுப்புவீர்கள்.?

விஷால் : ஜன்னல் ஓரத்தில் நடித்த சஞ்சய் பாரதி தான் எனது சாய்ஸ்.

நமது நிருபர் :
நீங்கள் விளையாடும்போது உங்களை உற்சாகப்படுத்த நடிகைகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். வேறு பெரும் நடிகர்கள் உற்சாகப்படுத்த வருவதில்லையே?

விஷால் : முன்பு ஒருமுறை விஜய் வந்தார், இந்தமுறை தனுஷ் கூட சென்னையில் நடப்பதாக இருந்தால் வருவதாக சொல்லியிருக்கிறார். சரத்குமார் எங்கள் உடனேயே இருக்கிறார்.

நமது நிருபர் : நடிகைகளுக்கு என்று கிரிக்கெட் அணி உருவாக்கும் எண்ணம் இருக்கிறதா.? நட்சத்திர கிரிக்கெட்டில் ஆணாதிக்கமே இருப்பதாக தோன்றுகிறதே?

விஷால் : இந்தமுறை கூட லெட்சுமி பிரியா என்ற ஒரு நடிகை தானாகவே விரும்பி வந்து எங்களுடன் பயிற்சி செய்தார். நன்றாகவே விளையாடினார். ஆனால் அதற்கு முன்பாகவே சென்னை ரைனோஸ் அணியின் வீரர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் அவர் பங்குபெறவில்லை. அதுமாதிரி நடிகைகளையும் இனி வருங்காலங்களில் அணியில் சேர்த்து கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. அதுதெரிந்ததும் அதுப்பற்றி முடிவு செய்வோம்.

நமது நிருபர் :
நடிகைகளுக்கு என்று தனி அணி அமைக்க கூடாதா...?
விஷால் :

நல்ல ஐடியா! நிச்சயமாக வருங்காலங்களில் அதுப்பற்றி பரிசீலிக்கப்படும் என்றனர் விஷால் மற்றும் அணி உரிமையாளர் கங்க பரசாத்.

நமது நிருபர் : கர்நாடக போகிறீர்களே அங்கு ஏற்கனவே டப்பிங் படங்கள் கூடாது என நான்கு நாட்கள் முன்னர்தான் கர்நாடக நடிகர்கள் மறியல் போராட்டம் எல்லாம் நடத்தினர். இதுமாதிரி சூழலில் விரும்பத்தகாத செயல்கள் ஏதேனும் நடந்ததென்றால் என்ன செய்வீர்கள்? இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் மாதிரி கர்நாடக அணியினருடன் நீங்கள் மோதும் ஆட்டமும் இருக்குமா.? கடந்தமுறையே கசப்பான அனுபவத்துடன் திரும்பி வந்தது ஞாபகம் இருக்கிறதா.!?

விஷால் : நிச்சயமாக அதுமாதிரி எதுவும் நடக்காது. கர்நாடக படவுலகில் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாள படவுலகிலும் கூட முன்பு டப்பிங் படங்கள் கூடாது என்று போராடி இருக்கின்றனர். அது பாதிப்புக்குள்ளான அவரவர் விருப்பம். அதனால் கிரிக்கெட் விளையாடும் போது எந்த விரும்புதகாத சூழலும் நடைபெற வாய்ப்பில்லை. பெங்களூருவும் இந்தியாவில் தான் இருக்கிறது. இது ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் இல்லை என்பது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். ஆனாலும், மற்ற அணியினருடன் மோதும்போது காட்டும் உத்வேகத்தை 50 சதவீதம் கூடுதலாக கர்நாடக அணியினருடன் காட்டுவோம் என்று முடித்து கொண்டார் விஷால்.::
 
tamil matrimony_HOME_468x60.gif

Comments