மீண்டும் படம் டைரக்ட் செய்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!!!

7th of February 2014
சென்னை::குணசித்திர வேடங்களில் நடித்து வரும் லட்சுமி ராமகிருஷண்ன் முதன் முதலாக ஆரோகணம் என்ற படத்தை டைரக்ட் செய்தார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் மீண்டும் அடுத்த படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார்.

ஆரோகணம் படத்தை தயாரித்த ஏவிஏ புரொடக்ஷன் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஹீரோவையும் தேடிக் கொண்டிருக்கிறார். பியா பாஜ்பாய் ஹீரோயினாக நடிக்கிறார். கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர தம்பி ராமையா, ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார்கள். இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஓநாயும ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய பலாஜி ரங்கா கேமராமேன், மேட்லி புளூஸ் மியூசிக் டைரக்டர்.

படத்தின் பூஜை நேற்று (பிப்ரவரி 5) ஏவிஏ புரொடக்ஷன் அலுவலகத்தில் நடந்தது. அடுத்த மாதம் கும்பகோணத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து கோவை, பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நட
த்த திட்டமிட்டிருக்கிறார்கள்.::     
tamil matrimony_HOME_468x60.gif

Comments