உற்சாகத்தில் இயக்குனர் செல்வபாரதி!!!

24th of February 2014
சென்னை::விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா  உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய கே.செல்வபாரதி, சிறு இடைவெளிக்குப் பிறகு இயக்கி தயாரித்திருக்கும்  படம் 'காதலைத்தவிர வேறொன்றுமில்லை'.

இப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்த அனைவரும் செல்வபாரதியை மிகவும் பாராட்டியுள்ளார்கள். மெரினா, கோழி சோடா பொன்ற படங்களைப் போல சிறியவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றிப் பெறும் என்று படம் பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்ததால், இயக்குனர் கே.செல்வபாரதி மிகவும் உற்சாகமடைந்துள்ளார்.  மேலும், இப்படத்தில் இமான் அண்ணாச்சியின் காமெடி காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறதாம்.

படத்தில் உள்ள நடிகர், நடிகைகளின் நடிப்பு, பாடல்கள், நகைச்சுவை உள்ளிட்ட அனைத்தும் வெற்றிக்குரிய அம்சங்களாக இருப்பதாக படம் பார்த்த அனைவரும் தெரிவித்துள்ளார்கள்.

இதனைக் கேட்டு உற்சாகமடைந்துள்ள படக்குழுவினர், இப்படத்தை மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.::
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments