விஜய் - முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு இன்று கொல்கத்தாவில் தொடங்கியது!!!

4th of February 2014
சென்னை::
ஜில்லா' படத்திற்குப் பிறகு விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிவர். 'துப்பாக்கி' படத்தின் மூலம், மாபெரும் வெற்றியைக் கொடுத்த விஜய் - முருகதாஸ் கூட்டனி மீண்டும் இணைவதால், இப்படத்திற்கு பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்க, லால்குடி இளையராஜா கலையை நிர்மாணிக்கிறார். சண்டைப்பயிற்சி அனல் அரசு..      
tamil matrimony_HOME_468x60.gif

Comments