தமிழ் ஹீரோயின் ஆனார் மிஸ்.போபால் விதார்ஷா!!!

28th of January 2014சென்னை::பிரபுதேவாவின் உதவியாளர் சஞ்சீவ் சீனிவாஸ் முதன் முதலாக டைரக்ட் செய்து வரும் படம் பொண்னொன்று கண்டேன். ஸ்டேட் அதெலட்டிக் சாம்பியன் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் விதார்ஷா. 2012ம் ஆண்டு மிஸ்.போபால் மற்றும் மிஸ்.மத்திய பிரதேசம் பட்டங்களை பெற்றவர்.
 
சில இந்திப் படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த இவர் இப்போது இந்தப் படத்தின் மூலம் தமிழ்பட ஹீரோயின் ஆகிவிட்டார். பேயக்கா மீனா என்பவர் வில்லியாக நடிக்கிறார். அழகன் பொன்ராஜ் மியூசிக் போட்டிருக்கிறார். அபீர் அலிகான் கேமராமேன்.
லவ்வுக்கு அழகு முக்கியமில்லேன்னு மெசேஜ் சொல்லுகிற படம். எல்லாவித குவாலிபிக்கேஷனும் இருந்தாலும் அழகாக இல்லைங்ற ஒரே காரணத்துக்காக ஹீரோவின் காதலை மறுத்து அவமானப்படுத்தி விடுவார். பஸ் நிலையத்தில் கிடைக்கிற வேலையை செய்து வாழும் ஹீரோ தன் செயல்களால் எப்படி ஹீரோயின் மனசுல இடம்பிடிக்கிறார்ங்றதுதான் கதை. பாதி படத்தை பஸ்டாண்டுலதான் எடுத்திருக்கோம். புதுமுகத்தோட நடிக்க மாட்டோம்னு இங்குள்ள நடிகைங்க சொல்லிட்டதால விதார்ஷாவை நெட்டுல பார்த்துட்டு நடிக்க அழைச்சிட்டு வந்துட்டோம்" என்கிறார் டைரக்டர் சஞ்சீவ் சீனிவாஸ்.::
tamil matrimony_HOME_468x60.gif

Comments