வீரம் படத்திற்கு தமன்னாவே முதுகெலும்பு!!!

8th of January 2014
சென்னை::
அஜீத், நாயகனாக நடித்துள்ள, வீரம் படத்தில், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில், தமன்னா தான் ஹீரோயின் என்றாலும், எந்தவித முக்கியத்துவமும் இல்லாத வேடத்தில், அவர் நடித்திருப்பதாக, பரபரப்பாக செய்திகள் வெளியாயின.
 
ஆனால், படத்தின் இயக்குனர், இதற்கு அளித்துள்ள விளக்கத்தில், ஒப்புக்கு சப்பாணியாக, தமன்னாவை, இந்த படத்தில் பயன்படுத்தவில்லை. இந்தப் படத்தில், தமன்னாவை, மிக முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால், கதையின் முதுகெலும்பே தமன்னாதான். இதற்கு முன், தமிழ் படங்களில் நடிக்காத அளவுக்கு, இந்த படத்தில் நல்லதொரு வேடத்தில் நடித்துள்ளார்.
 
அஜீத், தமன்னா கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது என்கிறார். படம் வந்தால் தெரிந்து விடும், தமன்னாவின் கேரக்டர், உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது தானா அல்லது வழக்கமான டூயட் பாடும், ஹீரோயின் வேடமா என்பது என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments