பாங்காங்க் ராணுவ தளத்தில் படப்பிடிப்பு நடத்தினார் அர்ஜூன்!!!

3rd of January 2014
சென்னை::இது இரண்டாம் பாக சீசன் போலும். அமைதிப்படை, சிங்கம் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகிவிட்டன. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக காத்திருக்கிறது. இப்போது இந்த இரண்டாம் பாக பட்டியலில் லேட்டஸ்டாக தயாராகி வருகிறது 20 வருடத்துக்கு முன் அர்ஜுன் நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்கவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் அர்ஜூனிடம் கேட்டால், “ஜெய்ஹிந்த் 1994-ல் வெளிவந்தப்ப தீவிரவாதம் பற்றிய விழிப்புணர்வு நாட்டுக்கு தேவைப்பட்டது. ஆனா இப்ப மக்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வுதான் முக்கியமா தேவைப்படுது. இது நான் திடீர்னு எடுத்த முடிவு இல்ல. ரொம்ப நாளாவே யோசிச்சுட்டு வந்த ஒரு விஷயம்தான்..” என்கிறார்

தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்தப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது விட்டது. சமீபத்தில் பாங்காக்கில் ஒரு சண்டை காட்சியை படமாக்கியுள்ளார் அர்ஜூன். ராணுவம் சம்மந்தப்பட்ட சுமார் பத்து ஏக்கர் இடத்தில், முழுக்க உபயோகம் இல்லாத பிளைட்கள், படகுகள், கார்கள், என குவிந்து கிடந்ததாம். அங்கே அமெரிக்க ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதும் காட்சிகளை பத்து நாட்கள் படமாக்கியுள்ளார் அர்ஜூன்

அடுத்து மும்பையில் 20 நாட்களும், லண்டனில் 20 நாட்களும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம் அதைத்தொடர்ந்து. சென்னையில் 20 நாட்கள் படப்பிடிப்புடன் படம் முடிந்து விடும் என்கிறார் அர்ஜுன்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments