தமிழுக்கு தான் முன்னுரிமை ! அமலாபால்!!!

22nd of January 2014
சென்னை::தலைவாவுக்கு பின் நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்து வரும் , இந்த படங்கள் தமிழில் தனக்கு பெரிய இடத்தை பிடித்துக் கொடுக்கும் என்று நம்புகிறாராம். அவர் கூறுகையில், தலைவா படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்ற போதும், முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்து இருந்தேன்.
 
அதனால், அந்த படம், மனதளவில் எனக்கு திருப்தியை தந்தது. அதன் பின் தமிழில் நடிக்கும் இரண்டு படங்களிலும், இன்னும் வெயிட்டான வேடங்களில் நடிக்கிறேன் என்கிறார். மேலும், என்னதான் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தாலும், தமிழ் சினிமாதான் என் டார்கெட். அதனால், தமிழ் படங்களுக்கு போக, மீதமுள்ள கால்ஷீட்டை தான் மற்ற மொழிப் படங்களுக்கு கொடுப்பேன் என்கிறார்..::
tamil matrimony_HOME_468x60.gif

Comments