தாவூத் படத்தின் மீது வழக்கு. – ஸ்ருதி ஹாசன் அறிவிப்பு!!!

31st of January 2014
சென்னை::இந்தியில் ஸ்ருதிஹாசன் நடித்து வெளியான படம் ‘டி – டே’. அதில் ஸ்ருதி நடித்த கிளாமர் காட்சி ஒன்று படத்துக்கு இந்தியாவெங்கும் பரவலான பப்ளிசிட்டி தந்தது.
 
இப்போது இதன் தமிழ் மொழிமாற்றுப் படம் ‘தாவூத்’ என்ற தலைப்பில் வெளியாகவிருப்பதாக விளம்பரங்கள் வந்திருக்கின்றன். இது குறித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்…
 
இந்தப் படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் முறையான அனுமதி பெறவில்லை. அதனால், அவர்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு தொடர்வது பற்றி ஆலோசித்து வருகிறேன்..!’ என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழ் ‘தாவூத்’துக்கு இது நெருக்கடியா இல்லை செலவில்லாத பப்ளிசிட்டியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!::
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments