பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தீபிகா படுகோனே-சிறந்த அறிமுக நாயகன் தனுஷ்!!!

25th of January 2014
சென்னை::
பாலிவுட் திரையுலகில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

அந்த வகையில் 59-வது பிலிம்பேர் விருதுகளுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டன. முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோனே, கடந்த ஆண்டு 4 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெறாத போதிலும், ராம் லீலாவில் அவரது சிறந்த நடிப்பு மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிலிம்பேர் விருதுக்கான சிறந்த நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், சிறந்த நடிகராக பர்கான் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாக் மில்கா பாக் படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இதேபேல் சிறந்த படமாக பாக் மில்கா பாக் படம் தேர்வு பெற்றுள்ளது. சிறந்த அறிமுக நாயகனாக தமிழ் நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஞ்சனா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

பிலிம்பேர் விருதுகள் வருமாறு:

சிறந்த நடிகர்- பர்கான் அக்தர் (பாக் மில்கா பாக்)
சிறந்த நடிகை- தீபிகா படுகோனே (ராம் லீலா)
சிறந்த இயக்குனர்- ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா (பாக் மில்கா பாக்)
சிறந்த படம் - பாக் மில்கா பாக்
சிறந்த அறிமுக இயக்குனர் - ரித்தேஷ் பத்ரா (தி லஞ்ச்பாக்ஸ்)
சிறந்த அறிமுக நாயகன் - தனுஷ் (ராஞ்சனா)
சிறந்த அறிமுக நாயகி - வாணி கபூர் (ஷுத்த தேசி ரொமான்ஸ்)
சிறந்த கதை-சுபாஷ் கபூர் (ஜோலி எல்எல்பி)
வாழ்நாள் சாதனையாளர் விருது - தனுஜா
சிறந்த இசை - ஜீத் கங்குலி, மிதூன் மற்றும் அங்கிட் திவாரி (ஆஷிக்கி-2)
சிறந்த பாடல் - பிரசூன் ஜோஷி (ஜிந்தா)
சிறந்த பின்னணி பாடகர் - ஆரிஜித் சிங் (தும் ஹி ஹோ, ஆஷிக்கி)
சிறந்த பின்னணி பாடகி - மோனாலி தாக்கூர் (சவார் லூன், லூத்தேரா)
tamil matrimony_HOME_468x60.gif

Comments