பால்கி படத்தில் ஊமையாக நடிக்கும் தனுஷ்!!!

1st of January 2014
சென்னை
::ராஞ்சனா வெற்றியைத் தொடர்ந்து தனுஷ், அடுத்த இந்திப் படத்தில் நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கிறார்.

சீனிகம், பா போன்ற படங்களை இயக்கிய பால்கி இயக்கும் புது படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக அக்ஷரா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

தனுஷ் இந்த படத்தில் வாய்பேச முடியாதவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இளையராஜா இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கி இறுதியில் முடிவடைகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments