தனுஷின் டபுள் ட்ரீட்!!!!

16th of December 2013
சென்னை::தனுஷ் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் கிப்ட் அளிக்கவுள்ளார்.ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பாலுடன் ஜோடி சேர்ந்துள்ளப் படம் 'வேலையில்லா பட்டதாரி'.
 
இவர்களுடன் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், சதீஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் தனுஷுக்கு 25வது படமாம்.'கொலைவெறி' புகழ் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'வுண்டர்பார் பிலிம்ஸ்' சார்பில் தனுஷே தயாரிக்கிறார்.இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிஸரை வருகிற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பரிசாகவும், பாடல்களை ஜனவரி 3ஆம் தேதி நியூ இயர் பரிசாகவும் அளிக்கவுள்ளார் தனுஷ்.தற்போது தனுஷ் கே.வி.ஆனந்தின் அனேகன் மற்றும் ஹிந்தியில் பால்கி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments