ஒருதலை ராகம்' புகழ் சங்கர் இயக்கும் 'மணல் நகரம்'!!!

12th of December 2013
சென்னை::ஒருதலை ராகம்' படத்தில் நடித்த சங்கர், முதல் முறையாக தமிழில் படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்திற்கு 'மணல் நகரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளம் என்று 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் சங்கர், 'வைரஸ்', 'கேரளோற்சவம்-2009' ஆகிய இரண்டு மலையாளப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் முதல் முறையாக தமிழ் சினிமாவில் படம் ஒன்றை இயக்குகிறார்.

'மணல் நகரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரஜின், கெளதம் கிருஷ்ணா, ஜெய்ஸ், வினோத்குமார் ஆகியோர் நடிக்க, துபாய் நாட்டைச் சேர்ந்த வருணா ஷெட்டி என்பவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

"இதுவரை  நிறைய படங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ஒரு பாடலோ  அல்லது ஒருசில காட்சிகளோ தான் படமாக்கி  வந்திருப்பர். முதல் முறையாக இங்கிருந்து சென்ற படக்குழுவினர் ஐம்பது நாட்கள் துபாயில் தங்கி படமாக்கி வந்திருக்கும் படம் மணல் நகரம். துபாயின் சட்டதிட்டங்களுக்கு நடுவே ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு என்பது சாத்தியமான காரியமல்ல. அதே நேரம் மணல் நகரத்தின் கதைக்களம் துபாயில் நடப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்தியாக வேண்டியது கட்டாயமாயிற்று." என்று படத்தைப் பற்றி கூறிய சங்கரிடம், ஏன் இப்போது தமிழ்ப் படங்களில் நீங்கள் நடிப்பதில்லை என்று கேட்டதற்கு, "மலையாளத்தில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். சரியாக அமைந்தால் தமிழில் நடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

மணல் நகரத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். துபாயில் வசிக்கும் எனது நண்பர் முரளிராமன் இலாயத்தின் கதைக்கு எனது சென்னை நண்பரும் படத்தின் தயாரிப்பாளருமான எம். ஐ. வசந்த் திரைக்கதை அமைத்துத் தந்தார். நான் இயக்கியுள்ளேன்.

வேலைக்காக, குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்லுபவர்கள் படும் பாடு மிகக்கொடியது. தவிர, கடுமையான சட்டதிட்டங்களுக்கு நடுவே அவர்கள் வாழும் வாழ்க்கை.. குடும்பத்தைப் பிரிந்து பாசத்தால் படும் அவதி பாதி, அங்கு வாழப்போராடும் அவர்களின் போராட்டம் மீதின்னு போகும்... திரைக்கதையில் அவர்களிடையே  வரும் காதல், நட்பு இதையும் கலந்து சொல்லியிருக்கிறேன். ஐம்பது நாட்கள் துபாயில் படப்பிடிப்பு முடிந்தது.. இன்னும் பத்து நாட்கள் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மணல் நகரத்தை  கமர்ஷியலாக, மிகப்பிரம்மாண்டமாக, மிகுந்த பொருட் செலவில் உருவாக்கியுள்ளோம்.

'மணல் நகரம்' - காதல் மற்றும் சில வலிகளையும் சுமந்து பேசும். அது நிறைய மனங்களுக்கு ஆறுதலையும்  சொல்லும்." என்று தெரிவித்தார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments