பாலச்சந்தரிடம் ஆசி பெற்ற அமீர்கான்: கே.பாலச்சந்தருடன் அமீர்கான் சந்திப்பு: தமிழ் படங்களை ரீமேக் பண்ணுவது பற்றி பேச்சு!!!


16th of December 2013
சென்னை::சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் சென்னை வந்த இந்தி நடிகர் அமீர்கான், திரைப்பட நிகழ்ச்சிக்குப் பிறகு சென்னையிலேயே தங்கினார். நேற்று காலை அவர் இயக்குநர் பாலச்சந்தர் வீட்டிற்கு சென்று அவரை சந்டித்து பேசினார்.

இந்தி மற்றும் தமிழ் சினிமா குறித்து இருவரும் பேசினார்கள். சுமார் 1 மணி நேரமாக பாலச்சரிடம் பேசிய அமீர்கான் பிறகு அவரிடம் ஆசிபெற்று விடைபெற்றார்.

இது குறித்து கூறிய அமீர்கான், "பாலச்சந்தர் சார், இந்திய சினிமாவில் முக்கிய இடம் வகிக்கிறார். அவர் இந்தியில் இயக்கிய ஏக் துஜே கேலியே படம் பார்த்து நான் வியந்தேன். அவருடைய ரசிகன் என்ற முறையிலேயே அவரை நான் சந்தித்தேன்." என்று தெரிவித்தார்.
 
சென்னையில் நடந்து வரும் 11வது சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்க அவரது சொந்த செலவில் சென்னை வந்திருந்த இந்தி இளம் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நேற்று தமிழ் நாட்டின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் சினிமாவின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.
 
அமீர்கானின் சத்யமே ஜெயதேவ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றியும், அவரது கஜினி, 3 இடியட்ஸ், தூம் 3 படங்கள் பற்றியும் பாலச்சந்தர் பாராட்டி பேசினார். பாலச்சந்தரின் பல படங்கள் பற்றி அமீர்கான் சிலாகித்து பேசினார். தமிழில் பாலச்சந்தர் இயக்கிய படங்களை இந்தியில் ரீமேக் செய்வது பற்றியும் அமீர்கான் பாலச்சந்தருடன் பேசியதாக தெரிகிறது.
 
இன்றைக்குள்ள சூழ்நிலையில் உன்னால் முடியும் தம்பியை இந்தியில் ரீமேக் செய்து அதில் கமல் நடித்த கேரக்டரில் அமீர்கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பாலச்சந்தர் அவரிடம் கருத்து சொன்னதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் அமீர்கான் தெரிவித்துள்ளார். வருகிற 19ம் தேதி நடக்க இருக்கும் தூம் 3யின் பிரிமியர் ஷோவுக்கு வருமாறு கே.பாலச்சந்தருக்கு அமீர்கான் அழைப்பு விடுத்துள்ளார்.
 
tamil matrimony_HOME_468x60.gif

Comments