ஜில்லாவின் பாடல்கள் விஜய்க்கு என் நன்றி கடன் தீர்க்கும்: இமான் நெகிழ்ச்சி!!!

22nd of December 2013
சென்னை::ஜில்லாவின் பாடல்கள் ரிலீசாகி பட்டைய கிளப்ப ஆரம்பித்திருக்கிறது. பாட்டுகள் அனைத்தும் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கிறார் இமான்.
 
தமிழன் படத்தின் மூலம் என்னை இசை அமைப்பாளராக்கி அழகு பார்த்தவர் விஜய். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் படத்துக்கு இசை அமைத்திருக்கிறேன். அவருக்கு நன்றி தெரிவிக்க கிடைத்த சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொண்டு இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான உழைத்து பாடல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன்.
 
அது முழுசாக மக்களைப் போய் சேர்ந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதேபோல பின்னணி இசையையும் கவனத்தோடும், பொறுப்போடும் அமைத்து வருகிறேன் என்கிறார் இமான்.
படத்தின் பாடல்களை கேட்ட பிறகு தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அடித்த கமெண்ட் இது.. "இமான் இன்னொரு ரகுமான்".
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments