புதியவர்களே வாருங்கள் - அழைக்கிறார் இளையராஜா!!!

15th of December 2013
சென்னை::
தலைப்பை படித்தவுடன் இளையராஜா, ஏதோ இசைப் பள்ளி ஆரம்பித்து விட்டார் என்று நினைக்க தோன்றும்,  (அதெற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்) ஆனால், விஷயம் அதுவல்ல.

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற
 
நிறுவனம் சார்பில் பி.வேலுச்சாமி என்ற தொழிலதிபர் தயாரிக்கும் முதல் படம் 'ஒரு ஊர்ல'. கே.எஸ்.வசந்தகுமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். மு.மேத்தா பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இளையராஜா, பாலுமகேந்திரா, கே.ஆர், மு.மேத்தா, இயக்குநர்கள் ரத்தினகுமார், பாலாஜி சக்திவேல், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

விழாவில் பேசிய அனைவரும் இளையராஜாவின் இசையைப் பற்றியும், அந்த இசையும், இளையராஜாவும் எப்படிபட்டவர்கள் என்பது பற்றியும் ரொம்ப விரிவாக பேசினார்கள்

இறுதியில் பேசிய இளையராஜான் "ஒரு ஊர்ல படத்தை முழுவதும் பார்த்த பிறகுதான் இசையமைத்தேன். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்ததால் என்னால் நிறைவாக இசையமைக்க முடிந்தது. எந்த படத்திற்கும் நான் மூன்று நாட்களுக்கு மேல் இசையமைத்தது இல்லை, அது 100 நாட்கள் ஓடக்கூடிய படமாக இருந்தாலும் சரி, வெள்ளி விழா படமானாலும் சரி மூன்று நாட்களுக்கு மேல் என் ஸ்டுடியோவில்  அந்த படம் இருந்ததில்லை.

அந்த காலத்தில் இருந்தே, பல புதுமுக இயக்குநர்களுக்கு என்னுடைய பெயர் பயன்பட்டிருக்கிறது. ஒரு சிலர் என்னிடம் வந்து "ஏன் அவர்களுக்கு எல்லாம்  இசை அமைக்கிறீர்கள்" என்று கேட்பார்கள். அதற்க்கு நான் இசையமைத்து நீ வந்தது மாதிரி அவன் வந்து விட்டு போகட்டுமே, உன்னக்கு உண்டான இடம் உனக்கு, அவனுக்கு உண்டான இடம் அவனுக்கு என்பேன். என்றுமே நான் புதியவர்களுக்கு இசையமைக்க மறுத்ததில்லை." என்று கூறியவர், இறுதியில் "புதியவர்களே வாருங்கள் நான் இருக்கிறேன்." என்று கூறி தனது பேச்சை முடித்தார்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments