ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை டைரக்டர் ஷங்கர் மீண்டும் இயக்குகிறார்!!!

19th of December 2013
சென்னை::ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை டைரக்டர் ஷங்கர் மீண்டும் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து மெகா ஹிட்டான படம், எந்திரன் . ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை ஷங்கர் பிரமாண்டமாக இயக்கி இருந்தார். அதிகப் பொருட்செலவில் தயாரான இந்தப் படம் பலத்த பாராட்டை பெற்றது.
 
இதையடுத்து இப்போது விக்ரம் நடிக்கும் ஐ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்தப் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை அவர் மீண்டும் இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆக்ஷன் இல்லாத கதையில் நடிக்க ரஜினி ஆர்வமாக இருப்பதால் அதற்கான கதையை உருவாக்க உள்ளனர் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
 
tamil matrimony_HOME_468x60.gif
 
 
 
 
 
 
 


Comments