இவன் வேற மாதிரிக்காக நடிப்புப் பயிற்சி பெற்ற சுரபி!!!

5th of December 2013
சென்னை::இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் சுரபி கூறியதாவது:டெல்லியை சேர்ந்தவள் நான். மாடலிங் பண்ணிக்கொண்டிருந்தேன். அதன் மூலம் இவன் வேற மாதிரி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதில் மாலினி என்ற கல்லூரி மாணவியாக வருகிறேன். ஃபோல்டான கேரக்டர். தமிழ் தெரியாது என்பதால் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தேன்.

டைரக்டர் சரவணன் முன்கூட்டியே நடிப்புப் பயிற்சி அளித்ததால் படப்பிடிப்பில் ஈசியாக இருந்தது. முதல் நாள் ஷூட்டிங், போலீஸ் ஸ்டேஷனில் நடப்பது போல் படமாக்கப்பட்டது. ஒரே டேக்கில் நடித்து பாராட்டு பெற்றது மறக்க முடியாத அனுபவம். கிளைமாக்ஸ் காட்சியில் என் நடிப்பு பேசப்படும் என்கிறார்கள். தொடர்ந்து நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments