'நெடுஞ்சாலை' படத்தை வாங்கிய ரெட் ஜெயண்ட்!!!

18th of December 2013
சென்னை::சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நெடுஞ்சாலை'. ஆரி என்பவர் ஹிரோவாக நடித்துள்ள இப்படத்தில், ஹிரோயினாக ஷிவதா நடித்துள்ளார்.

'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு இசையமைத்த சத்யா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், ரிலீஸாக தயாராக இருந்த இப்படத்தை சமீபத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி பார்த்தார். படத்தைப் பார்த்து இயக்குநரை வெகுவாக பாராட்டிய உதயநிதி, பாராட்டியதோடு மட்டும் நின்றுவிடாமல், 'நெடுஞ்சாலை' படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் விருப்பத்திற்கு ஏற்ப, தற்போது 'நெடுஞ்சாலை' படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

tamil matrimony_HOME_468x60.gif

Comments