டிசம்பர் 13ஆம் தேதி 'இவன் வேரமாதிரி' ரிலீஸ்!!!

4th of December 2013
சென்னை::'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன், விக்ரம் பிரபுவை வைத்து இயக்கியுள்ள படம் 'இவன் வேரமாதிரி'. இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஸ் சந்திரஸ் போஸின், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்று கூறப்பட்டது.

படத்தின் டிரைலரைப் பார்த்த போதும் அப்படிதான் தெரிந்தது. இருப்பினும், இதை மறுத்துள்ள இயக்குநர் சரவணன், அந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல இது, சமூகத்தில் நடக்கும் சில பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம் தான் என்று கூறினார்.

இதற்கிடையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சத்யா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை நா.முத்துகுமார், விவேகா ஆகியோர் எழுதியுள்ளனர். புதுமுகம் சுரபி என்பவர் நாயகியாக நடித்துள்ளார்.

கும்கி வெற்றிப் படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் என்பதால், இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படம் வருடி டிசம்பர் 13ஆம் தேதியன்று வெளியாகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments