ஏப்ரல் 11 முதல் 'மான் கராத்தே!!!

9th of December 2013
சென்னை::சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துவரும் 'மான் கராத்தே' பர்ஸ்ட் லுக் ஜனவரி 1ம் தேதி, படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
 
சிவகார்த்திகேயன், ஹன்சிகா, ’எதிர்
நீச்சல்’ சதீஷ் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'மான் கராத்தே'. ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுத, திருக்குமரன் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
தொடர்ச்சியாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருப்பினும், படத்தின் புகைப்படங்கள், டீஸர் , பாடல்கள் என எதையும் வெளியிடாமல் இருக்கிறது படக்குழு.
 
இந்நிலையில், 'மான் கராத்தே' படத்தின் FIRST LOOK ஜனவரி 1ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். காதலர் தினத்தன்று பாடல்களும், ஏப்ரல் 11ம் தேதி படமும் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்காக சமீபத்தில் பாண்டிச்சேரியில் பாடல் ஒன்றை படமாக்கினார்கள். அதனை ஏ.ஆர்.முருகதாஸிடம் திரையிட்டு காட்டிய போது, பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட பாடல்களில் இப்பாடலின் காட்சிப்படுத்துதல் தான் அருமையாக அமைத்திருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார்.
 
அதுமட்டுமன்றி, இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கு ஒன்று அமைத்து, சுமார் 2000 துணை நடிகர்கள் நடிக்க காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

 

Comments