பொங்கல் ரேஷில் களம் இறங்கும் வடிவேலு!!!

30th of November 2013
சென்னை::வரும் பொங்கல் பண்டியன்று விஜயின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் வெளியாகின்றன. இந்த முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ளும் பொங்கல் ரேஷில் தற்போது வைகை புயல் வடிவேலும் களம் இறங்குகிறார்.

சிறு இடைவெளிக்குப் பிறகு களம் இறங்கும் வடிவேலு, இந்த முறை ஹீரோவாக களம் இறங்குகிறார். வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்துவரும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது.

முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். ஏற்கனவே வடிவேலு நடித்து ஹிட்டான இம்சை அரசன் 23–ம் புலிகேசிபட சாயலில் சரித்திர கால படமாக இதை எடுத்துள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் மற்றும் அஜீத் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையி, தற்போது வடிவேலு படத்தையும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட முயல்கிறார்கள்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments