நடிகையின் உதட்டை கடித்த நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு!!!

15th of November 2013
சென்னை::கே.கே. பிலிம் இண்டர் நேஷனல் பட நிறுவனம் சார்பில் கஞ்சாகருப்பு தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் வேல்முருகன் போர்வெல்ஸ்.

இன்னொரு நாயகனாக அங்காடி தெரு மகேஷ் நடிக்கிறார். ஐ.டி.அரசன் மதுரை டாக்டர் சரவணன் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். வடிவேலுவுடன் நடித்த அனைத்து காமெடி நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி எம்.பி.கோபி இயக்குகிறார். இவர் மலையன் படத்தை இயக்கியவர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

கிராமம் கிராமமாக போய் போர்வெல் போட்டு பிழைப்பு நடத்துபவர்களை பற்றிய கதை. போர்வெல் உரிமையாளராக வருகிறார் கஞ்சா கருப்பு. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு போரூர் கார்டனில் நடந்தது. கஞ்சா கருப்பு-ரகசியா புது திருமண தம்பதி. கஞ்சா கருப்பு போர் போடும் தொழில் செய்பவர் என்பதால் தனது மனைவியை பிரிந்து நண்பர்களுடன் வெளியூருக்கு போர் போட சென்றுவிடுகிறார். இப்படி பல நாட்கள் கழித்து வீடு திரும்பும் அவரை, ரகசியா அரவணைத்து வரவேற்பது போன்று காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

இந்த காட்சியில் கஞ்சா கருப்பு நடித்த போது திடீரென ரகசியாவின் உதட்டை கடித்து விட்டாராம். இதனால் கோபமடைந்த ரகசியா, கஞ்சா கருப்பை திட்டியதோடு படப்பிடிப்பிற்கு வர மறுத்துவிட்டாராம். அதன் பிறகு இயக்குனர் கோபியும் படப்பிடிப்பு குழுவினரும் சமாதானம் செய்து ரகசியாவை நடிக்க வைத்தனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments