தயாரிப்பாளர் வழக்கு: நய்யாண்டி படத்துக்கு தடை!!!

7th of November 2013
சென்னை::நஸ்ரியா ஜோடியாக நடித்து சமீபத்தில் ரிலீசான நய்யாண்டி படத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை நீதிமன்றம். நய்யாண்டி படம் ரிலீசுக்கு சில வாரங்களுக்கு முன்பிலிருந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது. படத்தின் நாயகி நஸ்ரியா தன் தொப்புளுக்கு டூப் போட்டதாகக் கூறி பரபரப்பை அளித்தார். அதுவே படத்து எதிர்மறை விளம்பரமாகியது, இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு மாதம கழித்து, இந்தப் படத்தை எதிர்த்து மலையாள தயாரிப்பாளர் மணி சி.கப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் நான் மலையாளத்தில் எடுத்து வெற்றிகரமாக ஓடிய மேலப்பரம்பில் ஆன் வீடு என்ற படத்தின் கதைதான் நய்யாண்டி ஆகும். என்னிடம் அனுமதி பெறாமல் இந்த படத்தை எடுத்துள்ளனர். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். மணி சி.கப்பன் மேலும் கூறும்போது, நய்யாண்டி படத்தை யார் பார்த்தாலும் மலையாள படத்தின் தழுவல் என்பதை புரிந்து கொள்வார்கள். என் படத்தில் இருந்து 12 காட்சிகளை அப்படியே காப்பியடித்து படமாக்கி உள்ளனர். வசனமும் அப்படியே உள்ளது. 
 
இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தேன். இந்த நிலையில் தமிழில் எனக்கு தெரியாமல் எடு
த்துள்ளனர்," என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நய்யாண்டி படத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்தப் படம் மலையாளப் படத்தின் தழுவல்தான் என இயக்குநர் சற்குணம் ஏற்கெனவே கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

Comments