கமல் ஹாசன் படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம்!!!கமல் படத்துக்கு முதன் முறையாக இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா!!!

11th of November 2013
சென்னை::உலக நாயகன் கமல்ஹாஸனுடன் முதன் முறையாக கைகோர்க்கிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம்.
விஸ்வரூபம்-2 படத்தை முடித்த கையோடு கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தமவில்லன். இதில் கமல் நகைச்சுவை கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்தப் படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் முதன் முறையாக கமல் ஹாஸனுடன் இணைந்து சந்தானமும் நடிக்கவிருக்கிறார்.

அதுமட்டுமின்றி கமல் படத்துக்கு முதன் முறையாக இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments