எல்ரெட் குமார் தயாரிக்கும் 'இல்ல ஆனாலும் இருக்கு!!!

1st of November 2013
சென்னை::விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம் ஆகியப் படங்களை தயாரித்தவரும், முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை இயக்கியவருமான தயாரிப்பாளர் எல்ரெட் குமார், தயாரிக்கும் அடுத்தப் படத்திற்கு 'இல்ல ஆனாலும் இருக்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய டிகே என்பவர் இயக்கும் இப்படம் முன்பே அறிவிக்கப்பட்டது என்றாலும், தலைப்பு வைக்காமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா, சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராமி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார்.

புதிய கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் 15 புதிய தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தவுள்ளனர். காமெடி திரில்லருடன் உருவாகும் இப்படத்தை உத்தரகாண்டில் நைனிதால் என்ற ஊரில் கலர்புல் காட்சிகளுடன் படமாக்கியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 50 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர். 

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், இயக்குநராக அறிமுகமாகும் யான் படத்தையும் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஜீவாவும், நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நடிக்கின்றனர்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments