புதிய 'கெட் அப்'பில் சிம்பு!!!

18th of November 2013
சென்னை::சாக்லேட் பாய் வேடங்களில், நடித்து புகழ் பெற்ற சிம்பு, ஏற்கனவே சில படங்களில், ஆக் ஷன் அவதாரம் எடுத்தார். ஆனால், அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், சற்று இடைவெளிக்கு பின், மீண்டும், ஆக் ஷன் அவதாரத்துக்கு தயாராகி வருகிறார்.
 
கவுதம் மேனன் இயக்கப் போகும் படத்தில், சிம்பு, ஹீரோவாக நடிப்பது, உறுதியாகி விட்டது. இந்த படத்தில் தான், அதிரடி ஆக் ஷன் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம், சிம்பு. இதற்காக, அடர்த்த்தியான தாடி வளர்த்துள்ளார், சிம்பு.
 
இதுகுறித்து, அவர் கூறுகையில், 'ஏற்னவே, 'தொட்டி ஜெயா' என்ற படத்தில், இதேபோல், தாடி வளர்த்திருந்தேன். அதுவும், ஆக் ஷன் படம் தான். தற்போது, நடிக்கவுள்ள படம், அதிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட படம். என் ரசிகர்களுக்கு, அதிரடியான ஆக் ஷன் விருந்து காத்திருக்கிறது' என்கிறார், சிம்பு.
tamil matrimony_HOME_468x60.gif

Comments