வீரம் - இது போதாதே...?!!!

23rd of November 2013
சென்னை::வீரம் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை. இதுவரை நான்குப் பாடல்கள் முடிந்திருக்கின்றன. கதைப்படி நான்கு போதும். ஆனால் சிடியாக வெளியிடும் போது ரசிகர்களுக்கு பாதி பந்தியில் கைகழுவியது போலிருக்குமே?
சிறுத்தை சிவா இயக்கத்தில் அ‌‌‌ஜீத் நடித்து வரும் வீரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தமன்னா அ‌‌ஜீத் ஜோடியாக நடித்துள்ளார். ஏகப்பட்ட தம்பிகளின் ஒரே அண்ணனாக நடித்துள்ளார் அ‌‌ஜீத். படம் நெடுக வேட்டி சட்டைதான் தலயின் காஸ்ட்யூம்.
 
பொங்கலை டார்கெட் செய்து தயாராகும் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். மேலும் ஒரு பாடலை சேர்க்கலாமா என்ற யோசனை இயக்குனருக்கும் மற்றவர்களுக்கும் உள்ளது. இப்போதே படம் இரண்டரை மணி நேரம் ஓடும், பாடலை சேர்த்தால் படத்தின் வேகம் படுத்திடுமோ என்ற பயமும் உள்ளது.

அனேகமாக ஐந்தாவது பாடல் சிடியில் மட்டும் இடம்பெறலாம். மற்ற நான்குப் பாடல்களுக்கும் திணேஷே நடனம் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
                    tamil matrimony_HOME_468x60.gif

Comments