சிம்புவை இயக்கும் மிஷ்கின்?!!!

20th of November 2013
சென்னை::ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு கிடைத்த பாஸிடிவ் விமர்சனத்தால் எக்ஸ்ட்ரா தெம்புடன் இருக்கிறார் மிஷ்கின். அவர்கிட்ட என்னமோ இருக்கு என்கிற எண்ணம் முன்னணி ஹீரோக்களிடமும் வந்திருக்கிறது. பலரும் அவரது இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்கள்.
சிம்புவும் அதில் ஒருவர்.
 
அடுத்தப் படத்தில் மிஷ்கின் சிம்புவைதான் ஹீரோவாக டிக் செய்திருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரம் தெ‌ரிவிக்கிறது.
 
பாண்டிரா‌ஜின் படம், கௌதம் படம், வாலு, வேட்டை மன்னன் என நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். நான்கையும் முடித்த பிறகு நிதானமாக மிஷ்கின் புராஜெக்ட் டேக் ஆஃப் ஆகும் என்கிறது கோடம்பாக்கம்.
 
இருட்டுக்குள் மட்டுமே கேமரா வைப்பவ‌ரின் படத்தில் ஒரு ரொமா‌ண்டிக் ஹீரோ. காம்பினேஷன் கலக்கலாதான் இருக்கு. 
tamil matrimony_HOME_468x60.gif

Comments