வீரம் படப்பிடிப்பு நிறைவு: டிசம்பர் 18ல் இசை!!!

29th of November 2013
சென்னை::அஜீத், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் வீரம். சிவா இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு
அஜீத் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுவும் ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் ‘நரைத்த’ தலை முடியுடன்தான் நடிக்கிறார்.
 
படம் முழுவதுமே அஜீத்துக்கு வேட்டி சட்டைதான் காஸ்ட்யூம். அவராவே விரும்பி நடிக்கிற கேரக்டர் இது. மேலும் படத்துல மருந்துக்குக் கூட பன்ச் டயலாக் கிடையாதாம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வீரம் படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவுக்கு வந்துவிட்டதாம். படத்தை திட்டமிட்டபடி முடித்திருக்கிறார் இயக்குனர் சிவா.
 
பொங்கலுக்கு வெளிவர உள்ள ‘வீரம்’ படத்தின் இசை வெளியீடு விரைவில் அதவாது டிசம்பர் 18ம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன. அடுத்தடுத்த அஜீத்தின் பட வெளியீட்டால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments