டிசம்பர் -13ல் ‘இவன் வேற மாதிரி’ படம் வெளியீடு!!!

22nd of November 2013சென்னை::இவன் வேற மாதிரி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு.
 
எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, சுரபி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘இவன் வேற மாதிரி’. ‘எங்கேயும் எப்போதும்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களுக்கு இசையமைத்த சி.சத்யா தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். யு.டிவியும் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 13ம் தேதி வெளியாகிறது.
 
இதனிடையே ‘இவன் வேற மாதிரி’ படம் தணிக்கைக் குழுவிடம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு எல்லோரும் பார்க்கும் வகையிலான ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ‘கும்கி’ படத்திற்குப் பிறகு ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்து வரும் படம் இது. சுரவி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
 
முதல் படத்தை வெற்றிப் படமாகக் கொடுத்த இயக்குனர் சரவணன், நடிகர் விக்ரம் பிரபு இருவருக்குமே இந்த இரண்டாவது படம் அவர்களது திரையுலக வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் படமாக அமையும்.
                    tamil matrimony_HOME_468x60.gif

Comments