காமெடியன் மகன் கதாநாயகனாகிறார்!!!

18th of October 2013
சென்னை::காமெடி நடிகர் ஜெயமணியின் மகன் வர்ஷன், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, சிங்கம், வேங்கை என 150க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக் கூட்டணியில் நடித்தவர் ஜெயமணி. தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர், தன்னுடைய மகனை கதாநாயகனாக உருவாக்கியுள்ளார்.

சினிமாத் துறையில் இருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹீரோக்கள், முதன்மை காமெடி நடிகர்கள் என அனைவரும் தங்களின் வாரிசுகளை அறிமுகப்படுத்துவதில் ஆராவாரம் செய்ய, எந்தவித ஆராவாரமும் இன்றி அமைதியான முறையில் ஜெயமணியின் மகன் ஹீரோவாகியுள்ளார்.

கம்யூட்டர் இன் ஜினியரிங் படப்பிடிப்பு முடித்த வர்ஷனுக்கு, மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு வேலை கிடைத்தாலும், தனக்கு உள்ள சினிமா ஆர்வத்தினால் அந்த வேளையை விட்டுவிட்டு நடிப்புத் துறைக்கு வந்துள்ளார்.

தனது மகன் ஹீரோவானது குறித்து கூறிய ஜெயமணி, "என் மகன் வர்ஷன் பி.இ. கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்து முடித்தார். ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது. ஆனால் அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியுடன் இருந்தார். நான் காமெடியனாக இருந்தாலும், என் மகன் கதாநாயகனாக அனைத்துத் தகுதிகளுடன் இருந்ததால் கதாநாயகனாக்கி விட்டேன்." என்கிறார்.

தற்போது 'அது வேற இது வேற' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வர்ஷன், சினிமாவுக்காக முறையாக நடனம், சண்டைப்பயிற்சி போன்றவற்றுடன், கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் பெற்றுள்ளார். சினிமாவில் ஹீரோவாவதற்கு என்ன என்ன தகுதிகள் வேண்டுமோ, அதை அனைத்தையும் கற்று, தானகவே வாய்ப்பு தேடி அலைந்த வர்ஷனுக்கு, 'அது வேறு இது வேறு' படத் தயாரிப்பாளர் ஜெயசீலன், இயக்குநர் திலகராஜன் இருவரும் வாய்ப்பு தந்து அவரை ஹீரோவாக்கியிருக்கிறார்கள். இப்படத்தை இயக்கும் திலகராஜன், இயக்குநர் சுந்தர்.சி யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்திய சினிமா நூற்றாண்டு ஆண்டில் ஹீரோவாக அறிமுகமாகும் வர்ஷனின் முதல் படமான 'அது வேற இது வேற' படம் முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகிறது. ஒரு ஹீரோவுக்கு காதல், சண்டை என்று எது வந்தாலும் காமெடி என்பது கொஞ்சம் கஷ்ட்டம் தான். ஆனால், வர்ஷன் முதல் படம் என்பதே தெரியாதவாறு இந்த படத்தில் காமெடி கலந்த நடிப்பில் அசத்துகிறார் என்று அவருடன் பணியாற்றும், கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி ஆகியோர் பாராட்டுகிறார்கள். இந்த படத்தில் வர்ஷனுக்கு ஜோடியாக தாரா நடிக்கிறார்.

தனது சினிமா அறிமுகத்தைப் பற்றி கூறும் வர்ஷன், "அது வேறு இது வேறு' முழு நீள காமெடிப் படம். காமெடி கதைகள் கண்டிப்பாக ஜெயிக்கும். மக்கள் மனதில் நீங்கா இடம்பெறும் என்பதால் காமெடி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளேன். தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளது. நல்ல கதைகள், வித்தியாசமான கதாநாயகனாக நடிக்கத் தயாராகி வருகிறேன்." என்றார்.

Comments