சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்!!!

8th of October 2013
சென்னை::5. நினைத்தாலே இனிக்கும்
கமல், ர‌ஜினியின் நினைத்தாலே இனிக்கும் படத்தை மீண்டும் சென்ற வெள்ளிக்கிழமை வெளியிட்டனர் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 6.5 லட்சங்களை இந்தப் படம் வசூலித்துள்ளது.
 
4. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இந்த வருட சூப்பர்ஹிட்களில் ஒன்று இந்த வாலிபர் சங்கம். சென்ற வார இறுதியில் 7.6 லட்சங்களையும், வார தினங்களில் 20.8 லட்சங்களையும் இப்படம் வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 8.6 கோடிகள்.
 
3. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
இந்த வருடத்தின் சிறந்த படம் என பாராட்டப்படும் ஓநாய்க்கு வசூல் ரொம்ப சுமார். வார இறுதியில் 15.4 லட்சங்களையும், வார தினங்களில் 18.4 லட்சங்களையும் வசூலித்துள்ளது. முதல் பத்துதின வசூல் 54.3 லட்சங்கள்.
 
2. ராஜா ராணி
இந்த வாரம் இரண்டாவது இடத்தில். வார தினங்களில் இன்னமும் இரண்டு கோடிக்கு மேல் - 2.07 கோடி வசூலித்து அட்டகாசமான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. வார இறுதியில் இதன் வசூல் 1.89 கோடி.
 
1. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய்க்கு நல்ல ஓபனிங். முதல் மூன்று தினங்களில் 1.91 கோடியை வசூலித்து முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Comments