சிம்பு, ஹன்சிகாவின் நிஜ காதல் காட்சிகள் படமாகிறது!!!

31st of October 2013
சென்னை::சிம்பு, ஹன்சிகாவின் நிஜ காதல் காட்சிகள் படமாகிறது. சிம்பு, ஹன்சிகா தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். இதைக்கேட்டு பல ஹீரோக்கள் ஷாக் ஆனார்கள். இதற்கிடையில் சிம்புவுடனான காதலை முறிக்க சில நடிகைகள் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிம்ரன் ஒருபுறம் ஹன்சிகாவுக்கு காதல் எச்சரிக்கை கொடுத்த வண்ணம் இருக்கிறார். மறு புறம் நயன்தாராவின் நாசுக்கான பேச்சும் ஹன்சிகாவின் மனதை குழப்புகிறதாம்.

இதையெல்லாம் மீறி சிம்பு ஹன்சிகா காதல் வளர்ந்து வருகிறது. இருவரும் வெவ்வேறு பட ஷூட்டிங்கில் இருந்தாலும் ஓய்வு நேரங்களில் மணிக்கணக்கில் செல்போனில்பேசி காதல் வளர்த்து வருகின்றனர். இதையே மையமாக வைத்து சிம்பு, ஹன்சிகாவுக்காக காதல் கதை உருவாக்கி வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ். அவரது அடுத்த படத்தில் சிம்பு நடிக்கிறார். இதில் தனது காதலியுடன் ஹீரோ செல்போனில் பேசி காதல் வளர்ப்பதை ருசிகர சீன் களாக உருவாக்க உள்ளார் இயக்குனர். அந்த காட்சிகள் அனைத்தும் சிம்பு, ஹன்சிகாவின் நிஜ காதலில் நடந்தவையாம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments