பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி: ஜில்லா படப்பிடிப்பு ஓவர்!!!

17th of October 2013
சென்னை::மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளுடன் ஜில்லா படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது.
 
தலைவா திரைப்படத்துக்குப் பிறகு விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. மதுரையை கதை களமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய் போலீஸாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிதான் காஜல் அகர்வால். இவர்களுடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ், பரோட்டா சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர். நேசன் இயக்கும் இப்படத்தை ஆர்.சௌதிரி பிரமாண்டமாக தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
 
ஜில்லாவின் டாக்கி போர்ஷன் ஏறக்குறைய முடிந்துவிட்டதாம். இப்போதைக்கு மோகன்லால் சம்பந்தப்பட்ட 5 நாள் ஷூட்டிங் மட்டுமே பாக்கியாம். இதையும் அடுத்த மாத இறுதியில் படமாக்குகிறார்கள். அதோடு மீதமிருப்பவை என்று பார்த்தால் அது பாடல் காட்சிகள்.
 
இம்மாத இறுதியில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. வெளிநாடுகளில் சில பாடல்கள் படமாக்கப்பட உள்ளன. சில ஹைதராபாத்தில். அதற்காக அரங்குகள் அமைக்கயிருக்கிறார்கள். டி.இமானின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது.

Comments