ஜப்பான் செல்கிறது ஜில்லா படக்குழு!!!

20th of October 2013
சென்னை::பாடல் காட்சிக்காக ஜில்லா படக்குழு விரைவில் ஜப்பான் செல்லவிருக்கிறது.
 
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜில்லா. புதுமுக இயக்குனர் நேசன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார்.
 
மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், போலீஸாக வருகிறார் விஜய். படத்தின் பெரும்பாலான காட்சிகளை கிட்டத்தட்ட எடுத்து முடித்துவிட்டார்களாம். பாடல்கள் காட்சிகள் மட்டும் தான் இன்னும் பாக்கி இருக்கிறதாம். இந்த மாத இறுதியில் பாடல் காட்சிகளை படம்பிடிக்கப் போகிறார்கள்.
 
இந்நிலையில் ஒரு டூயட் பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக ஜாப்பான் கிளம்ப இருக்கிறது படக்குழு. விஜய், காஜல் அகர்வால், இயக்குனர் நேசன் அடங்கிய படக்குழுவினர் செல்கின்றனர். பொங்கல் வெளியீடு என அறிவித்து விட்டதால் முன்கூட்டியே படத்தை முடித்து தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப் போகிறார்களாம்.

Comments